திரவத் தாரின் அளவுகளில் 10 சதவிகிதம் பிளாஸ்டிக் பயன்படுத்தி சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் தகவல்

கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் புதியதாக தார் சாலைகள் அமைத்தல், குழாய்கள் பதித்தல், இணையதள வடங்கள் அமைத்தல் மற்றும் பழுதுகளை செப்பனிட சாலைகள் அமைக்கும் பொழுது சுற்றுச்சூழல் நலன் கருதி பயன்படுத்தப்படும் திரவத் தாரின் அளவுகளில் 10 சதவிகிதம் பிளாஸ்டிக் பயன்படுத்தி சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது என கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மேலும் அவர் தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சியிலுள்ள ஐந்து மண்டலங்களின் அனைத்து வார்டுகளிலும் புதிய தார்சாலைகள் அமைப்பதும், பழுதுள்ள சாலைகளை சீரமைப்பதும் போன்ற பணிகளில் கோவை மாநகராட்சி சிறப்பாக செயலாற்றி வருகிறது.

மேலும், கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் புதியதாக தார் சாலைகள் அமைக்கப்படும் பொழுது பாதாள சாக்கடைக் குழாய்கள் பதிக்கும் பணிகள், புதியதாக குடிநீர் விநியோகக் குழாய்கள் பதித்தல் மற்றும் பழுது பார்த்தல், புதியதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து கிணற்று நீர் பகிர்மான குழாய்கள் பதித்தல் மற்றும் பழுது பார்த்தல், தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் பாதாள மின் வடம் அமைத்தல், இணையதள வடங்கள் அமைத்தல் போன்ற பணிகளால் சாலையில் ஏற்படும் பழுதுகளை செப்பனிட சாலைகள் அமைக்கும் பொழுது திரவத் தாரின் அளவுகளில் 10 சதவிகிதம் பிளாஸ்டிக் பயன்படுத்தி சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும், கோவை மாநகராட்சியில் உள்ள தெற்கு மண்டலம், 98-வது வார்டுக்குட்பட்ட பி.டி.ரோடு, எல்.ஐ.சி. காலனியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலும், 100-வது வார்டுக்குட்பட்ட கணேசபுரம் மெயின் ரோடு, ஸ்ரீனிவாசா நகர், இரங்கநாதபுரம் மற்றும் கார்மல் நகரில் ரூ.46.50 லட்சம் மதிப்பீட்டிலும், கிழக்கு மண்டலம், 58- வது வார்டுக்குட்பட்ட சக்கையார் நகர் மற்றும் ஜோதி நகரில் ரூ.286.50 லட்சம் மதிப்பீட்டில் திரவத் தாரின் அளவுகளில் 10 சதவிகிதம் பிளாஸ்டிக் பயன்படுத்தி சாலைகள் முடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற பல இடங்களில் பிளாஸ்டிக் மூலம் தார்சாலைகள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்தார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...