கோவையில் தனியார் பள்ளி நிறுவனர்கள் அமைப்பின் ஏ எம் பி எஸ் வெள்ளி விழா நிகழ்ச்சி ஜன.7-யில் துவக்கம்


கோவையைச் சேர்ந்த தனியார் பள்ளிகளின் நிறுவனர்கள் அமைப்பான ஏ எம் பி எஸ்-யின் 25 வது ஆண்டு நிரைவு விழா வரும் ஜனவரி 7 மற்றும் 8ம் தேதி நடைபெறவுள்ளது. இந்திய அரசின் யுபிஎஸ்சி முன்னாள் உறுப்பினரும் அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், கல்வியாளருமான இ.பாலகுருசாமி, ஏ எம் பி எஸ் கல்வி கண்காட்சியை துவக்கி வைக்கவுள்ளார்.

துவக்க விழா நிகழ்ச்சியில் "சென்னை வெள்ளம்" தொடர்பான போட்டியில் பங்குபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. மேலும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தேசிய அளவிலான சிறந்த கல்வியாளர்களின் கல்வி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

வெள்ளி விழாவின் முக்கிய அம்சமாக தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சிபிஎஸ்இ பள்ளி அமைப்புகளின் பொறுப்பாளர்கள் ஒன்றுகூடி கல்வி மேம்பாட்டிற்காக கலந்துரையாட உள்ளனர். மேலும், மும்பை, கோவா, கர்நாடகா, ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களின் சிபிஎஸ்இ பள்ளி அமைப்பின் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெறுகிறது.

இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஏ எம் பி எஸ் அமைப்பினை உருவாக்கிய பதினொன்று கல்வியாளர்களை கவுரவிக்கும விழா நடைபெறுகின்றது. இவ்விழாவிற்கு அவிநாசிலிங்கம் பல்கலைக் கழக துணை வேந்தர் பத்மஸ்ரீ டாக்டர் கிருஷ்ணகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

இதைத்தொடர்ந்து, மாலை நிறைவு விழா நிகழ்ச்சியில், யுஜிசி முன்னாள் துணைத் தலைவர், பேராசிரியர் முனைவர் எச்.தேவராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். 

பள்ளி மாணவ, மாணவியர்கள் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளி கல்வி தொடர்பான 76 கல்வி நிறுவனங்களின் கல்வி கண்காட்சி இரண்டு நாட்களும் நடைபெறுகின்றன.

இதுகுறித்து இவ்வாமைப்பின் பொதுச் செயலாளர் ஏ.பி.டி.போஸ் நமது நிருபரிடம் கூறுகையில், இந்திய அளவில் இதுபோன்ற கல்விக் கண்காட்சி அதிகளவில் நடைபெறுகிறது. ஆனால், தமிழகத்தில் இதுவே முதன் முறை ஆகும். இந்த கண்காட்சியில் பள்ளிகளுக்கான உபகரணங்களை விநியோகிப்பவர்களுக்கென 76 அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. பள்ளி நிறுவனர்களுக்கு தங்களது பள்ளியை மேம்படுத்த இதுவொரு நல்ல வாய்ப்பு ஆகும். இதில், ஆய்வகம், இருக்கைகள், நவீன கற்பிக்கும் கருவி உள்ளிட்டவற்றை வாங்கிக்கொள்ளலாம்.

மேலும், இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஆசிரியர்கள், கல்வியாளர்கள், நிர்வாக அலுவலர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் ஆகியோருக்காக கருத்தரங்கம் நடத்தப்படவுள்ளது. இந்த கருத்தரங்கில் பல்வேறு கற்பித்தல் முறை குறித்து விளக்கப்படவுள்ளது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், பார்வை குறைபாடுடையவர்களுக்கு என சிறப்பாக கற்பித்தல் முறை குறித்து விளக்கமளிக்கப்படவுள்ளது.

கற்றல் குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிபிஎஸ்இ பள்ளியில் தனி ஒதுக்கீடு உள்ளதா என்ற நமது நிருபர் கேள்விக்கு, ஒதுக்கீடு என்று தனியாக எதுவும் இல்லை. ஆனால், அவர்களுக்கென கற்பிக்கும் வழிமுறையில் மாற்றம் செய்யப்படும்" என்றார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...