எஸ்.ஐ.எச்.எஸ் காலனி மேம்பாலப் பணியை விரைவில் முடிக்கக் கோரி மாபெரும் காத்திருப்பு போராட்டம்


கோவை மாநகராட்சிக்குட்ட சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அங்கு ரயில்வே மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கியது. மேம்பால கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றுவந்தது, ஆனால், மேம்பாலத்திற்கு ஒரு புறத்தில் சாலை வசதிகள் இல்லாததால் நிலத்தை தர முடியாது எனவும், மேம்பாலப் பணிகளை நிறுத்த வேண்டும் எனவும் பொது நல வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டதைத் தொடர்ந்து, பணிகளை நிறுத்த நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.



இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக மேம்பால பணிகள் நடைபெறாமல் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது வாகன எண்ணிக்கை அதிகமானதால் மேலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பள்ளி குழந்தைகள், பணிகளுக்கு செல்வோர் உள்ளிட்ட பலர் அப்பகுதியில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். 



இதனை தொடர்ந்து, மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், தமிழக அரசையும், மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்தும் அனைத்து அரசியல் கட்சிகள், குடியிருப்போர் சங்கங்களின் கூட்டுக் குழு மற்றும் பொதுமக்கள் சார்பில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் இன்று மாபெரும் காத்திருப்பு போராட்டம் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி மேம்பாலம் அருகில் நடைபெற்றது. 



கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் பேசுகையில்; 2010ம் ஆண்டு திமுக ஆட்சியில் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியில் ரயில்வே பாதையின் குறுக்கே மேம்பாலம் கட்டும் பணிக்கு திட்டமிடப்பட்டது. இதற்கு ரூ.22 கோடி ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர் 2013ம் ஆண்டு மேம்பாலம் காட்டும் பணி தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் மேம்பாலம் கட்டுமானப் பணி முடிக்கப்படாமல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளிக் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் பெரும் சிரமத்துள்ளாகின்றனர்.



இது குறித்து கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் நெடுஞ்சாலை துறை அமைச்சரிடம் கூறப்பட்டபோது இதில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று அலட்சியமாக பதிலளித்தார். மேலும் இப்பணியை குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வருவாய்த்துறை இனைந்து இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் இப்பகுதியில் வசிக்கும் 20 ஆயிரத்திக்கும் மேற்பட்ட மக்களுக்கும் போக்குவரத்து வசதிக்கு பயனுள்ளதாக அமையும். குறிப்பாக மாவட்ட வருவாய்த்துறை இப்பணியை நடைபெறவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளது. இதற்கு தீர்வு காணும் வரை திமுக சார்பில் தொடர் போராட்டம் நடைபெறும் என்றார்.

இதில், தி.மு.க, பா.ஜ.க, ம.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் ஒன்றிணைந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசையும், மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...