வால்பாறையில் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்


வால்பாறையில் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக நள்ளிரவில் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகளையும், பள்ளி சத்துணவுக்கூடம், நியாயவிலைக் கடைகள் மற்றும் டீக்கடை, மளிகைக் கடை ஆகியவற்றை சேதப்படுத்தி வருகிறது.

 

வால்பாறையை அடுத்துள்ள பழைய வால்பாறை எஸ்டேட் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழைந்து அங்கிருந்த வீடுகளின் கதவுகளை உடைத்து பாத்திரங்கள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தியது. இன்று அதிகாலை ஸ்டேன்மோர் எஸ்டேட்டில் உள்ள சிந்தாமணி ரேஷன் கடையை உடைத்து 1 மூட்டை அரிசி மற்றும் பொருட்களை நாசம் செய்தது. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டு யானைகளை காட்டுப்பகுதிக்குள் விரட்டினர்.



 

இதே போல் வால்பாறை அருகே உள்ள உருளிக்கல், தாய்முடி, ஈட்டியார், புதுத்தோட்டம் ஆகிய பகுதிகளில் யானைகள் தொடர்ந்து முகாமிட்டுள்ளது. பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். வனவிலங்குகளிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க அரசு மின்வேலிகள் அமைத்தும் அகழிகளை வெட்டியும் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...