தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் தமிழை பயிற்று மொழியாக அறிவிக்கக்கோரி கோவையில் தமிழ் இயக்கங்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம்


தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் தமிழை பயிற்று மொழியாக அறிவிக்கக்கோரி, கோவையில் தமிழ் இயக்கங்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.



வரும் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழை பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும், தொடக்கப்பள்ளி முதல் உயர்கல்வி வரை தமிழ்மொழியை பயிற்று மொழியாக்க வேண்டும், அரசுப்பணிகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 100 சதவீதம் பணி வாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட பத்து கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை சிவானந்தா காலணி பகுதியில் பேரூர் ஆதினம் வளர் தமிழ் இயக்கம் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 

இந்த போராட்டத்தில் பேரூர் ஆதின இளையப்பட்டம் மருதாச்சல அடிகாளர், தமிழ் அமைப்பினர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாக கற்பிக்கப்பட்டு வரும் நிலையை மாற்றி, அனைத்து தொடக்க பள்ளிகளிலும் தமிழ் பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

மேலும் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற தமிழக அரசின் கொள்கைப்படி உயர் நீதிமன்றம், ஆட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழ் மொழியை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென வலியுறுத்திய அவர்கள், தமிழக அரசு உடனடியாக இக்கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தவில்லை எனில் தமிழறிஞர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். 

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...