சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் ‘மொபைல் டாய்லெட்டுகள்’


நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் கழிப்பறைகளை உபயோகிக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு அரசு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம்  à®µà®°à¯ˆ மானியம் கொடுத்துவருகிறது. அதுமட்டுமின்றி நகரப்பகுதிகளில் ஆங்காங்கே ரெடிமேட் கழிப்பறைகள் பொது மக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டது. அந்த கழிப்பறைகளுக்கு ‘நம்ம டாய்லெட்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

முறையான பராமரிப்பில்லாத காரணத்தால் கோவையின் பல இடங்களில் வைக்க்கப்பட்டிருந்த நம்ம டாய்லெட் பாழடைந்து போனது. மக்கள் அதிகமாக திரளும் இடங்களில் நம்ம டாய்லெட்டுகள் வைக்கப்பட்டதால், செயல்பாடாமல் இருந்தாலும் சரி என்றெண்ணிய நம்மவர்கள் அதில் சிறுநீர்  à®•ழித்து வந்தனர். சுத்தப்படுத்தப்படாத நிலையில் நம்ம டாய்லெட்டுகள் மீண்டும் மீண்டும் உபயோகிக்கப்பட, சுகாதாரத்தை பேணும் விதமாக அமைக்கப்பட்ட நம்ம டாய்லெட்டுகளே அதற்கு எமனாக அமைந்துள்ளன.



கோவை அரசு மருத்துவமனையில் இருந்து அரசு கலைக்கல்லூரி செல்லும் சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு மொபைல் டாய்லெட் மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டது. ‘நோ பார்க்கிங்’ என்ற காவல்துறையின் அறிவிப்பு பதாகைகள் இருந்தும் சாலையின் இருபுறமும் நிற்கும் வாகனங்கள் நடுவே அந்த மொபைல் டாய்லெட்டை அமைப்பதில் சிரமம் ஏற்படவே மக்கள் நடக்கும் நடை பாதையில் அதை அமைத்தனர்.

அவசரத்திற்கு உதவும் என்று நினைத்த மக்களுக்கு தற்போது தொற்றுநோய் பீதியை கிளப்பும் விதமாக உள்ளது இந்த மொபைல் டாய்லெட். முன்னதாக கூறியதுபோல் பராமரிப்பில்லாத சூழலில் மீண்டும் மீண்டும் உபயோகிக்கப்பட்டது. இதன் விளைவாக கடந்த சில நாட்களாக அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீச துவங்க, அப்பகுதியை கடந்து செல்ல முற்படும் பொதுமக்கள் ‘கப்-சிப்’ என்று மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர்.



சுகாதார சீர்கேடுகள் தொடர்பாக ஊடகங்கள் பலமுறை செய்திவெளியிட்டுள்ளன. ஆனால், ஒரு சில அதிகாரிகள் தவிர மற்ற அனைவரும் செய்திகளுக்கு செவி சாய்ப்பதில்லை. 

இந்த மோசமான மொபைல் டாய்லெட் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரி ஒருவரை "சிம்ப்ளிசிட்டி" குழுவினர் தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால், ஊடகம் என்ற ஒற்றை வார்த்தையில் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் இது போன்ற பிரச்சனைகளில் சம்பந்தபட்ட அதிகாரிகள் மும்முரம் காட்ட வேண்டும் என்றும், செயல்படாத அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...