அகில உலக கிருஷ்ணபக்தி இயக்கத்தின் (இஸ்கான்) பொன்விழா கொண்டாட்டம்

அகில உலக கிருஷ்ணபக்தி இயக்கத்தின் பொன்விழாவும், 25வது ஆண்டு தேர்த்திருவிழாவின் துவக்கவிழாவும் கோவை இஸ்கான் சார்பில் ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணா கலையரங்கில் நடைபெற்றது. விழாவில், தவத்திரு ஜெயப்பதாக சுவாமி மஹாராஜூம், மண்டலச் செயலாளர் மற்றும் கோவை இஸ்கான் தலைவருமான தவத்திரு பக்தி வினோத சுவாமி ஆகியோர் கலந்து கொண்டனர். 



அன்னபூர்ணா குழுமத்தலைவர் ஸ்ரீனிவாசன் வரவேற்புரை வழங்கினார். கோவை கே.ஜி மருத்துவமனையின் மருத்துவர் பக்தவத்சலம் சிறப்புரை ஆற்றினார். பின்னர் பேசிய தவத்திரு ஜெயப்பதாக சுவாமி இயக்கத்தின் செயல்பாடுகளை விளக்கினார். மேலும், அவர் மேற்கு வங்க மாநிலத்திலுள்ள மாயாப்பூர் பிரபஞ்சத்தில் உள்ள கோள்களின் அமைப்பைச் சித்தரிக்கும் வகையில் மிகப்பிரமாண்டமான "வேத கோளரங்க ஆலயம்" ஒன்று அமைக்கப்பட்டு வருவதை அறிவித்தார். 



இஸ்கான் தலைவரும் மற்றும் மண்டலச் செயலாளர் தவத்திரு பக்தி வினோத சுவாமி தனது உரையில்; இயக்கத்தின் ஐம்பது ஆண்டுகால சாதனைகளை சுட்டிகாட்டினார். உலகளாவிய பிரச்சனைகளை தீர்க்க, வழிவழியாக வரும் நம் மரபை பின்பற்றி மக்கள் தங்களுடைய எண்ணைகளை மாற்றியமைப்பதும், ஆன்மீகத்தில் ஈடுபடுவதும் மிகமிக அவசியம் என்றுரைத்தார். கொடிசியாவின் அருகில் உள்ள ஸ்ரீ ஜெகன்னாதர் ஆலயவளாகத்தில், 60 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டு வரும் பிரமாண்டமான ஸ்ரீராதா கிருஷ்ணர் ஆலயம் கோவையின் கலாச்சார மையமாகத் திகழும் எனக் கூறினார்.  



தொடர்ந்து, அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, சீனா போன்ற 25 நாடுகளில் கிருஷ்ண பக்தர்கள் நடத்திய பஜனை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...