கோவை இஸ்கான் சார்பில் 25-வது ஆண்டாக நடைபெற்ற ஜெகநாதர் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கோவையில் ஆண்டுதோறும் இஸ்கான் எனப்படும் கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. இதன், 25-வது ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற திருவிழாவில் அலங்கரிக்கப்பட்ட 42 அடி உயர தேரில் ஜெகநாதர், சுப்ரதா தேவி சிலைகளுடன் பலதேவர் சிலைகளும் அமைக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.



இதில் வெளிநாட்டினர் உட்பட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கோலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்டவற்றுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். மேலும், ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா என்ற முழக்கங்களை எழுப்பியபடி அவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். 



இத்தேர் திருவிழாவில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 25 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர். ரஷ்யாவில் இருந்து வந்திருந்த வேலன்சியா இதுகுறித்து கூறும் போது, இந்தியாவில் இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.



பொதுவாக மக்கள் கோவில்களில் கடவுளை வழிபட செல்லும் நிலையில் மக்களை காண கடவுள் வருவதாகவும், இத்தேர் திருவிழா வருடந்தோறும் நடத்தப்பட்டு வருவதாகவும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...