கோவையில் பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடிய வெளிநாட்டினர்


கோவை மாவட்டம், சின்னவேடம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் சர்வதேச பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது. தமிழகர்களின் பாரம்பரிய மற்றும் கலச்சாரத்தை எடுத்துக்காட்டும் விதமாக மண்பாணையில் புத்தரிசி இட்டு மாணவ மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர். 



அப்போது கிராமிய கலைகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட நடனங்களை ஆடி மாணவ மாணவிகள் மகிழ்ந்தனர். 

மேலும், இந்நிகழ்வின் போது பிரான்ஸ், லண்டன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் பள்ளி மாணவர்களுடன் இணைந்து தமிழர்களின் கலச்சார நடனமான கரகாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்று அசத்தியது அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்திருந்தது. 

இதேபோல், கிராமங்களை நினைவூட்டும் வகையில் குச்சிமிட்டாய், குருவி ரொட்டி, ஜவ்வு மிட்டாய் உள்ளிட்ட தின்பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டதுடன், கிளி ஜோசியமும் அனைவருக்கும் பார்க்கப்பட்டது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...