தேசிய அளவில் பல்கலை.,க்கு இடையேயான போட்டிகளின் பங்கேற்க கோவை வந்துள்ள வீரர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என புகார்

கோவை நேரு விளையாட்டு அரங்கில் பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான தேசிய அளவிலான 77-வது தடகள விளையாட்டு போட்டிகள் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. 

அண்ணா பல்கலைக் கழகம் சார்பாக நடத்தப்படும் இப்போட்டிகளில், நாடு முழுவதும் உள்ள 189 பல்கலைக் கழகங்களை சேர்ந்த 2605 வீரர், வீராங்கணைகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற 46 போட்டிகள் நடைபெற உள்ளது. 

இதன் முதல் நாளான நேற்று ஓட்டப்பந்தயம்,  நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் போன்ற போட்டிகளுக்கான தேர்வு  சுற்றுகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகள் வருகின்ற 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தடகள போட்டிகளை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் இன்று துவங்கி வைத்தார். 

இதனிடையே, தடகள போட்டிகளில் பங்கேற்க வந்துள்ள பல்வேறு மாநில வீரர், வீராங்கனைகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விளையாட்டு மைதானத்தில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனவும், மைதானத்தில் இருந்து வெகு தொலைவில் வீரர்களுக்கு தங்குமிட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தடகள வீரர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

மேலும், தங்குமிடங்களிலும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை எனவும், இதனால் தனியாக அறை எடுத்து தங்க வேண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...