மத்திய அரசின் போக்குவரத்து கட்டண உயர்வை கண்டித்து அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டம்


மத்தியில் ஆளும் பா.ஜா.க அரசு போக்குவரத்து அலுவலகங்களில் புதிய கட்டணங்களை பல மடங்காக உயர்தியுள்ளது. ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க பழைய கட்டணம் 300 ரூபாயாக இருந்ததை தற்போது 640 ஆகவும் எப்.சி கட்டணத்தை ரூ.225 இருந்து ரூ.625 ஆகவும், லேட் எப்.சி அபராதம் 60 நாட்கள் வரை ரூ.100 ஆக இருந்ததை ரூ.3000 என பல்வேறு கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளது.



மத்திய அரசின் இந்த முடிவை மற்ற மாநிலங்கள் இதுவரை அமல்படுத்தாத நிலையில் தமிழக அரசு அமல்படுத்தி அபராதங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக கூறி கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டம் செய்தனர்.



கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலம் முன்பு 150ற்க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர் தங்களது வாகனத்தை நீண்ட வரிசையில் நிறுத்தி இந்த கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்ட்த்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அனைத்து ஆட்டோ ஓட்டுநர் கமிட்டி ஒருங்கினைபாளர் மற்றும் சி.ஐ.டியு தலைவர் சுகுமாறன் கூறும்போது:

தற்போது இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் பல பேர் வாடகை ஆட்டோ ஓட்டுபவர்கள் என்றும் சொந்தமாக ஆட்டோ வைத்திருப்பவர்கள் வங்கிகளில் கடன் பெற்று அதனை செலுத்த முடியாமல் வாழ்வாதாரதிற்கே சிரமபட்டு வரும் நிலையில் மத்திய அரசு பெரும் முதலாளிகளிடம் இத்தொழிலை ஒப்படைக்கும் நோக்கில் இந்த கட்டண உயர்வை கொண்டு வந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

இக்கட்டண உயர்வை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்டோ தொழிற்சங்களை இணைத்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...