அனைத்து வசதிகளுடன் மேலும் ஒரு புதிய மஹிந்திரா டீலர்ஷிப் கோவையில் துவக்கம்

இந்தியாவின் பன்முக பயன்பாட்டு வாகனங்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனமான மஹிந்திரா என்ற முழுமையான 3எஸ் (சேல்ஸ், சர்வீஸ், ஸ்பேர்ஸ்) சேவை வசதியுடன் புதிய டீலர்ஷிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.



இந்த புதிய முதன்மை ஷோரூம், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு விற்பனை மையம், 2 சேவை மையங்களையும் ஒருஇருப்பு நிலையத்தையும் கொண்டிருக்கும். நாடு முழுவதும் விரிவாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக இதை மேற்கொள்கிறது.

இந்த விநியோக மையமானது, 65 ஆயிரத்து 789 சதுரடி பரப்பளவில் மஹிந்திரா ஆட்டோமொபைல், தனிநபர் தேவையுடன் வணிகத்தையும் நிறைவு செய்ய அனைத்து தயார்ப்புகளையும் கொண்டிருக்கும்.

விற்பனைக்கான விசாரணைகள், சேவை மற்றும் உதிரிபாகங்கள் தேவைக்கு என இரண்டு விற்பனையகங்கள் ஆர்.எஸ்.புரம் மற்றும் ஈரோட்டில் அமைந்துள்ளது.

விற்பனைக்கும் பின் சேவைக்கென துடியலூரில் 3 அதிநவீன பட்டறைகளை 25 ஆயிரம் சதுரடி பரப்பளவில் 25 பணிமனை மற்றும் 10 வாகன அழகுபடுத்தும் தளங்களையும் கொண்டிருக்கும். வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் வாகனங்களை வழங்கவும், சந்தையின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வாகனங்களை வழங்கவும், 150 வாகனங்களை இருப்பு வைக்க இடப்பரப்பை கொண்டுள்ளது.

இதன் துவக்கவிழாவில் பேசிய மஹிந்திரா அன்ட் மஹிந்திரா லிமிடெட் விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை பிரிவு முதுநிலை துணைத் தலைவர் வீஜே ராம் நக்ரா கூறுகையில், "வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கும் வசதிக்கும் ஏற்ப சிறப்பான விற்பனை மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது.

எங்களுக்கு மிக முக்கிய சந்தையாக திகழும் தமிழ்நாட்டில் விரிவாக்க நடவடிக்கையாக கோவையில் 2-வது அனைத்து வசதிளையும் கொண்ட மையத்தை ஏற்படுத்தியுள்ளோம். நகரில் செயல்படும் 2 விற்பனை மையங்கள், 3 சேவை மையங்களும் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை தரும்" என்றார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...