பீட்டா அமைப்பின் பூர்வா ஜோஸ்புராவின் உருவ பொம்மைக்கு இறுதி சடங்கு செய்து எரித்த மலைவாழ் மக்கள்

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டில் மாடுகள் துன்புறுத்தபடுவதாக கூறி அமெரிக்காவை சேர்ந்த பீட்டா அமைப்பினர் தமிழகத்தில் ஜல்லிகட்டு நடத்த தடை உத்தரவு பெற்றுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஜல்லிகட்டுக்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்து வந்த நிலையில் இந்த ஆண்டு ஜல்லிகட்டு நடைபெறும் என்றிருந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறி மத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள், பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனதினர் என மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. 



இதன் ஒரு பகுதியாக கோவையை அடுத்த ஆனைகட்டி ஆலமரமேடு பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் தமிழகத்தில் ஜல்லிகட்டு நடத்த தடையாக இருக்கும் பீட்டா அமைப்பின் தலைமை நிர்வாகி அதிகாரி பூர்வா ஜோஸ்புராவின் உருவ பொம்மைக்கி நெற்றியில் 1ரூபாய் நாணயம் திலகமிட்டும், செருப்பு மாலை அணிவித்து பாடையில் சுமந்து இறுதி ஊர்வலமாக கொண்டு சென்றனர்.



பட்டாசுகள் வெடித்தும் ஒப்பாரி வைத்தும் சுமந்து சென்றவர்கள் உருவ பொம்மை மீது கோக் குளிர்பானம் மற்றும் மண் எண்னெய் ஊற்றி உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர். தமிழர்களின் கலாச்சாரமான ஜல்லிகட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பீட்டா அமைப்பு மீண்டும் தலையிட்டால் உருவ பொம்மையை எரித்தது போல பீட்டா அமைப்பின் தலைமை அதிகாரியையும் எரிப்போம் என ஆக்ரோஷத்துடன் தெரிவித்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...