5-வது டிவிசன் கிரிக்கெட் போட்டி : ரத்தினம் கல்லூரி அணிக்கு 4-வது வெற்றி

கோவை : 5-வது டிவிசன் கிரிக்கெட் போட்டியில் ரத்தினம் கல்லூரி அணி தொடர்ச்சியாக 4-வது வெற்றியைப் பெற்று அசத்தியுள்ளது.

கோவை : 5-வது டிவிசன் கிரிக்கெட் போட்டியில் ரத்தினம் கல்லூரி அணி தொடர்ச்சியாக 4-வது வெற்றியைப் பெற்று அசத்தியுள்ளது. 



கோவை கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் 5-வது டிவிசன் போட்டியில் ரத்தினம் கல்லூரி அணியும், வசந்தம் கிரிக்கெட் கிளப் அணிகளும் மோதின. முதலில் பேட் செய்த வசந்தம் கிரிக்கெட் கிளப் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக ஆனந்தகுமார் 38 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய ரத்தினம் கல்லூரி அணி ஒரு விக்கெட் மட்டுமே எஞ்சிய நிலையில் போராடி வெற்றி பெற்றது. ஜே. பிரதாப் குமார் 56 ரன்களும், ஹென்றி சேவியர் ஜெயராஜ் 38 ரன்களும் குவித்து அணியை வெற்றி பெறச் செய்தனர். இது ரத்தினம் அணிக்கு தொடர்ச்சியான 4-வது வெற்றியாகும். 

இதேபோல, மற்றொரு போட்டியில் காளீஸ்வரா கிரிக்கெட் கிளப் அணியை 129 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்ரீ கிரிக்கெட் கிளப் அணி வெற்றி பெற்றது. 

Newsletter