'அனஸ்டோமோசிஸ்-18' : ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்ற கோவை அரசு மருத்துவக்கல்லூரி

கோவை: 'அனஸ்டோமோசிஸ்-18' என்ற தென்னிந்திய அளவில் விளையாட்டு மற்றும் கலை போட்டிகளில் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது.


கோவை: 'அனஸ்டோமோசிஸ்-18' என்ற தென்னிந்திய அளவில் விளையாட்டு மற்றும் கலை போட்டிகளில் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது.



இந்த விளையாட்டு போட்டியில் தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 18 மருத்துவக் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், வாலிபால், ஓட்டப்போட்டிகள், கூடைப் பந்து, டென்னிஸ், கேரம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.



இதில் கோவை அணி பல்வேறு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி ஒட்டு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது. இரண்டாவது இடத்தை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி பெற்றுள்ளது. 



கலை நிகழ்ச்சிகளில் இ.எஸ்.ஐ அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்றது. இரண்டாவது இடத்தை பி.எஸ்.ஜி கல்லூரி பிடித்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மேற்குமண்டல ஐ.ஜி பெரியய்யா மற்றும் கோவை அரசு மருத்துவமனையின் முதல்வர் அசோகன் ஆகியோர் பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கினர்.



Newsletter