2-வது டிவிசன் கிரிக்கெட் போட்டி : எஸ்.என்.ஆர். அணி வெற்றி

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் வாரியம் சார்பில் நடைபெறும் 2-வது டிவிசன் கிரிக்கெட் போட்டியில் விங்ஸ் கிரிக்கெட் கிளப் அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் எஸ்.என்.ஆர். அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் வாரியம் சார்பில் நடைபெறும் 2-வது டிவிசன் கிரிக்கெட் போட்டியில் விங்ஸ் கிரிக்கெட் கிளப் அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் எஸ்.என்.ஆர். அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. 



நேற்று கோவை தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் எஸ்.என்.ஆர். அறக்கட்டளை விளையாட்டு கிளப் அணியும், விங்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. இதில், முதலில் பேட் செய்த எஸ்.என்.ஆர். அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. (ஸ்ரீராம் ஈஸ்வர் (35), எஸ். சச்சின் (32), அர்ஜுன் குமார் (40), எம்.அர்ஜுன் (37)) இதைத் தொடர்ந்து பேட் செய்த விங்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 37.2 ஓவர்களில் 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. அபாரமாகப் பந்து வீசிய எஸ்.என்.ஆர். அணியின் ஆறுமுக பாண்டி 44 ரன்களை விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி, அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 

2-வது டிவிசனில் ரத்தினம் கல்லூரி மைதானத்தில் நடந்த மற்றொரு போட்டியில் ராஜசேகர் மணி எம்.சி.சி. அணி (249) 2-வது வெற்றியைப் பதிவு செய்தது. எதிர்த்து ஆடிய சூர்யபாலா கிரிக்கெட்டர்ஸ் அணி 41.5 ஓவர்களில் 205 ரன்களை மட்டுமே எடுத்தது. இதேபோல, முதல் டிவிசன் போட்டியில் சூரியபாலா சி.சி.யை கோவை நைட்ஸ் அணி வீழ்த்தியது. 

 

Newsletter