முதல் டிவிசன் கிரிக்கெட் போட்டி : பி.வி.எம். ஸ்ரீ காந்த்தின் உதவியால் காஸ்மோ வில்லேஜ் அகாடமி அணி வெற்றி

கோவை : கோவையில் நடைபெற்று வரும் முதல் டிவிசன் கிரிக்கெட் போட்டியில் திருப்பூர் கிரிக்கெட் கிளப் அணியை, காஸ்மோ வில்லேஜ் அகாடமி அணி எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றது.


கோவை : கோவையில் நடைபெற்று வரும் முதல் டிவிசன் கிரிக்கெட் போட்டியில் திருப்பூர் கிரிக்கெட் கிளப் அணியை, காஸ்மோ வில்லேஜ் அகாடமி அணி எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் டிவிசன் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், முதல் டிவிசன் போட்டியில் காஸ்மோ வில்லேஜ் அகாடமி மற்றும் திருப்பூர் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின. 

பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், முதலில் பேட் செய்த காஸ்மோ அணிக்கு பி.வி.எம். ஸ்ரீகாந்த்தின் (45) சிறப்பான ஆட்டத்தால், 37.2 ஓவர்கள் முடிவில் 115 ரன்கள் என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியது. இதைத் தொடர்ந்து, எளிய இலக்குடன் களமிறங்கிய திருப்பூர் அணிக்கு, ஸ்ரீகாந்த் கடும் சவாலாக திகழ்ந்தார். 

இதனால், அந்த அணி 23.4 ஓவர்களில் வெறும் 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பேட்டிங்கில் அசத்திய ஸ்ரீகாந்த் பந்துவீச்சிலும் (6/39) அபாரமாக செயல்பட்டார். 

இதேபோல, மற்றொரு போட்டியில், கிங்ஸ் சி.சி. அணி (81 ரன்கள்), குறைந்த இலக்கை நிர்ணயித்தாலும், சாதூர்த்தியமாக பந்துவீசி எதிரணியான சீஷாக்ஸை (55 ரன்கள்) தோற்கடித்தது.

இதேபோல, 4-வது டிவிசனில் நடந்த போட்டியில் டெவில் ஸ்டோரக்கர்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் இ.ஏ.பி. கிரிக்கெட் அகாடமி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெவில் ஸ்டோரக்கர்ஸ் அணி, எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவேளையில் விக்கெட்டுக்களை இழந்தது. இதனால், அந்த அணி 34.2 ஓவர்களில் 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதைத் தொடர்ந்து, விளையாடிய இ.ஏ.பி. கிரிக்கெட் அகாடமி அணி, வெறும் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 18 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. 

Newsletter