தேசிய மாணவர் மேலாண்மை விளையாட்டுப் போட்டியில் ஜி.ஆர்.ஜி. ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட் ஸ்டடிஸ் அணி சாம்பியன்

கோவை : செட்டிபாளையம் பயர்பேர்டு மேலாண்மை நிறுவனத்தில் நடைபெற்ற தேசிய மாணவர் மேலாண்மை விளையாட்டுப் போட்டியில் கோவை ஜி.ஆர்.ஜி. ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட் ஸ்டடிஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை : செட்டிபாளையம் பயர்பேர்டு மேலாண்மை நிறுவனத்தில் நடைபெற்ற தேசிய மாணவர் மேலாண்மை விளையாட்டுப் போட்டியில் கோவை ஜி.ஆர்.ஜி. ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட் ஸ்டடிஸ் சாம்பியன் பட்டம் வென்றது. 



அகில இந்திய மேலாண்மை அசோஷியேசன் என்பது மேலாண்மை நிபுணர்களை கொண்ட தேசிய அளவிலான அமைப்பாகும். மாணவர்கள், கார்ப்பரேட் நிர்வாகிகள், தொழில்துறையினருக்கு மேலாண்மை சார்ந்த பயிற்சியை இந்த அமைப்பு வழங்கி வருகிறது.  தேசிய மேலாண்மை மாணவர் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதின் நோக்கமே எம்.பி.ஏ. பயிலும் மாணவர்களுக்கு மேலாண்மை சார்ந்த பயிற்சிகளையும், அனுபவத்தையும் அளிப்பதற்காகத்தான். இந்த நிலையில்,  அகில இந்திய மேலாண்மை அசோஷியேசனுடன் இணைந்து கோயமுத்தூர் மேலாண்மை அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான போட்டிகள் அமிர்தா மேலாண்மைப் பள்ளியில் கடந்த 21 - 23 வரையிலான தேதிகளில் நடைபெற்றன. கீழ்க்கண்ட குழுக்கள் இறுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. குரூப் ஆர் : வெற்றியாளர் ஜிஆர்ஜி மேலாண்மைப் பள்ளி, இரண்டாவது இடம் - ஜிஆர்ஜி மேலாண்மை பள்ளி, குரூப் எஸ் : வெற்றியாளர் பிஎஸ்ஜி மேலாண்மை நிறுவனம், இரண்டாவது இடம் - பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி சத்தியமங்கலம். 

நாடு முழுவதிலும் இருந்து வட்டார அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்தம் 15 குழுக்கள் நவம்பர் 24-ம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் பங்கேற்றன. இந்தப் போட்டி  பயர்பேர்டு மேலாண்மை நிறுவனம் சார்பில் நடைபெற்றது. 

இறுதிப் போட்டியையொட்டி நடைபெற்ற விழாவுக்கு கோயமுத்தூர் மேலாண்மை அசோசியேஷன் தலைவர் பிரசாந்த் தலைமை வகித்தார். அகில இந்திய மேலாண்மை அசோசியேஷன் இணை இயக்குநர் டி.கே.குப்தா தேசிய அளவிலான போட்டிகள் குறித்து எடுத்துரைத்தார். அகில இந்திய மேலாண்மை அசோசியேஷன் முன்னாள் தலைவர் யூ.கே. அனந்தபத்மநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். 

போட்டியில் வெற்றி பெற்று முதலாவதாக வந்த கோவை ஜிஆர்ஜி மேலாண்மை பள்ளி அணிக்கு முதல் பரிசாக ரூ. 40,000.00, இரண்டாவதாக கூர்கானை சேர்ந்த எஸ்ஜி.டி. பல்லகலைக்கழகம் இரண்டாமிடம் பிடித்தது இந்த அணிக்கு ரூ.30,000.00 பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மூன்றாம் இடம் பிடித்த உதய்பூர், பசிபிக் மேலாண்மை கல்லூரி அணிக்கு ரூ.20,000.00 வழங்கப்பட்டது. சிவா டெக்ஸ் யான் நிறுவன மேலாண்மை இயக்குநர் டாக்டர் எஸ். கே. சுந்தரராமன் வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அகில இந்திய மேலாண்மை அசோசியேஷன்  இணை இயக்குநர் ரவி ஜங்ரா நன்றி கூறினார்.

Newsletter