3-வது டிவிசன் கிரிக்கெட் போட்டி : ஆர்.கே.எஸ். கல்விநிலையம் அணிக்கு 3-வது வெற்றி

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் 3-வது டிவிசன் கிரிக்கெட் போட்டியில், ஆர்.கே.எஸ். கல்விநிலையம் அணி 3-வது வெற்றி பெற்றது.

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் 3-வது டிவிசன் கிரிக்கெட் போட்டியில், ஆர்.கே.எஸ். கல்விநிலையம் அணி 3-வது வெற்றி பெற்றது.

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 'என். தாமோதரன் நல அறக்கட்டளை கோப்பைக்கான' கிரிக்கெட் போட்டிகள் ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், சூர்யாபாலா கிரிக்கெட் அகாடமி மற்றும் ஆர்.கே.எஸ். கல்விநிலையம் அணியும் பலப்பரிட்சை நடத்தின. முதலில் பேட் செய்த சூர்யாபாலா கிரிக்கெட் அகாடமி 37.2 ஓவர்கள் முடிவில் 209 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய ஆர்.கே.எஸ். கல்விநிலையம் அணி, 36.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. 

பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த மற்றொரு போட்டியில், ஸ்ரீ சி.சி. அணி 47.3 ஓவர்கள் முடிவில் 270 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து, 2-வது பேட்டிங் செய்த நொய்யல் நிஞ்சாஸ் அணி 41.4 ஓவர்களில் வெறும் 159 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 

இதைத் தொடர்ந்து, 4-வது டிவிசன் போட்டியில், இ.ஏ.ப். கிரிக்கெட் அகாடமி மற்றும் கோயம்புத்தூர் ஃப்ரண்ட்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன. 

Newsletter