3-வது டிவிசன் கிரிக்கெட் போட்டி : முதல் வெற்றியைப் பதிவு செய்தது பி.எஸ்.ஜி. அணி

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் 3-வது டிவிசன் கிரிக்கெட் போட்டியில் பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கிரிக்கெட் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் 3-வது டிவிசன் கிரிக்கெட் போட்டியில் பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கிரிக்கெட் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கிரிக்கெட் அணி மற்றும் கோவை டஸ்கர்ஸ் அணியும் மோதின. முதலில் பேட் செய்த பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கிரிக்கெட் அணி 49.2 ஓவர்களில் 160 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய கோவை டஸ்கர்ஸ் அணி, 25.2 ஓவர்களில் 108 ரன்கள் ஆட்டமிழந்தது. பி.எஸ்.ஜி. அணி சார்பில் வினித் 5 விக்கெட்டும், லிலித் 3 விக்கெட்டையும் கைப்பற்றினர். 



இதேபோல, ரத்தினம் கல்லூரி மைதானத்தில் நடந்த 2-வது டிவிசன் போட்டியில், ராஜசேகர் மணி எம்.சி.சி அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்தத் தொடரில் 3-வது வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் பேட் செய்த ராஜேசேகர் மணி எம்.சி.சி. அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 320 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து, பேட் செய்த ரெட் டைமண்ட் அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், 140 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. 

Newsletter