3-வது டிவிசன் கிரிக்கெட் போட்டி : தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பதிவு செய்தது ஆர்.கே.எஸ். அணி

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் 4-வது டிவிசன் கிரிக்கெட் போட்டியில், ஆர்.கே.எஸ். அணி தொடர்ச்சியாக 4-வது வெற்றியை ருசித்தது.


கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் 4-வது டிவிசன் கிரிக்கெட் போட்டியில், ஆர்.கே.எஸ். அணி தொடர்ச்சியாக 4-வது வெற்றியை ருசித்தது. 

கோவை தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில், ஆர்.கே.எஸ். கல்விநிலையம் அணியும், கிங்ஸ் சி.சி. அணியும் மோதின. இதில், முதலில் பேட் செய்த கிங்ஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்தது. ஆர்.கே.எஸ். கல்விநிலையம் அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஜி. அழகப்பன் அபாரமாக பந்து வீசி, 6 (34) விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இதனால், அந்த அணி 35-வது ஓவரில் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இதைத் தொடர்ந்து, பேட் செய்த ஆர்.கே.எஸ். கல்விநிலையம் அணி 27 ஓவர்களில், 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக, கே. சபரிநாத் 31 ரன்கள் எடுத்தார். 

இதேபோல, பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் மைதானத்தில் நடந்த 2-வது டிவிசனுக்கான மற்றொரு போட்டியில், விங்ஸ் சி.சி அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுமுகம் சி.சி.யை வீழ்த்தியது.

Newsletter