தேசிய அளவிலான செஸ் போட்டி : 4-வது இடத்தை பிடித்த பாரதியார் பல்கலைக்கழக அணி

கோவை : தேசிய அளவிலான செஸ் போட்டியில் பாரதியார் பல்கலைக்கழக அணி 4-வது இடத்தை பிடித்து வரலாறு படைத்துள்ளது.

கோவை : தேசிய அளவிலான செஸ் போட்டியில் பாரதியார் பல்கலைக்கழக அணி 4-வது இடத்தை பிடித்து வரலாறு படைத்துள்ளது. 

ஹரியானாவில் உள்ள குரு ஜாம்பேஸ்வரர் பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் இருந்து ஏராளமான அணிகள் கலந்து கொண்டன. தென் மண்டல அளவில் சிறப்பாக ஆடிய பாரதியார் பல்கலைக்கழக அணி, இந்தத் தொடரில் பங்கேற்றது.



இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய கவிதா (பி.எஸ்.ஜி கல்லூரி), பி.எஸ்.தேக்சிதா (பி.எஸ்.ஜி கல்லூரி), ஆர்.காயத்ரி (பி.எஸ்.ஜி கல்லூரி), சிவசங்கரி (பி.எஸ்.ஜி கல்லூரி), பவித்ரா.ஆர் (பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி), கிருபாலனி (இந்துஸ்தான் கல்லூரி) ஆகியோர் அடங்கிய பாரதியார் பல்கலைக்கழக அணி முதல் முறையாக 4-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது. 

Newsletter