உலக சாம்பியன் பட்டம் வென்று இந்திய வீராங்கனை பி.வி சிந்து சாதனை

சீனாவில் நடைபெற்ற பேட்மிண்டன் வேர்ல்ட் சாம்பியன் போட்டியில் இந்தியாவிற்காக விளையாடிய பி.வி சிந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

சீனாவில் நடைபெற்ற பேட்மிண்டன் வேர்ல்ட் சாம்பியன் போட்டியில் இந்தியாவிற்காக விளையாடிய பி.வி சிந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

கடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்று இந்தியா முழுவதும் அறிமுகமானவர் பி.வி.சிந்து. தற்போது பேட்மிண்டன் வேர்ல்ட் சாம்பியன் போட்டியில் பங்கேற்று உலகளவில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பேட்மிண்டன் போட்டியில் உலகளவில் உள்ள முதல் முதல் 8 வீரர்கள் பங்கேற்கும் வேர்ல்ட் சாம்பியன் போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. சீனாவில் நடைபெற்ற இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்தியாவின் பி.வி சிந்து ஜப்பான் நாட்டு வீராங்கனையான ஓகுஹராவை 21-19, 21-17 செட் கணக்கில் தோற்கடித்து உலக சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். 

பி.வி சிந்து பேட்மிட்டன் போட்டியில் நிகழ்த்திய இந்தச் சாதனை இந்தியாவின் மகத்தான சாதனை எனக் கருதப்படுகிறது. 

Newsletter