முதல் டிவிசன் கிரிக்கெட் போட்டி : ஆர். நிரஞ்சனின் அபார சதத்தால் கோவை நைட்ஸ் அணி வெற்றி

கோவை : கோவை கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற முதல் டிவிசன் கிரிக்கெட் போட்டியில், ரெயின்போ சி.சி.,க்கு எதிரான ஆட்டத்தில் கோவை நைட்ஸ் அணி எளிதில் வெற்றி பெற்றது.

கோவை : கோவை கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற முதல் டிவிசன் கிரிக்கெட் போட்டியில், ரெயின்போ சி.சி.,க்கு எதிரான ஆட்டத்தில் கோவை நைட்ஸ் அணி எளிதில் வெற்றி பெற்றது. 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து டிவிசன் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது. இதில், பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த முதல் டிவிசன் போட்டியில் ரெயின்போ சி.சி மற்றும் கோவை நைட்ஸ் அணி பலபரீட்சை நடத்தியது. முதலில் பேட் செய்த ரெயின்போ சி.சி. அணிக்கு சாதிக் (83 ரன்கள்) கைகொடுக்க 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் சேர்த்தது. 

இதைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய கோவை நைட்ஸ் அணியின் வீரர் நிரஞ்சன் அபாரமாக ஆடினார். 66 பந்துகளில் 106 ரன்களை குவித்து, போட்டியின் 32-வது ஓவரிலேயே அணியை வெற்றி பெறச் செய்தார். 

இதேபோல, பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த 3-வது டிவிசன் போட்டியின் ஆர்.கே.எஸ். கல்விநிலையம் ஐ.சி.சி. அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷிஹாக்ஸ் சி.சி. அணி த்ரில் வெற்றி பெற்றது. 

Newsletter