பாரதியார் பல்கலை., உள்மண்டல கிரிக்கெட் போட்டி : பி.எஸ்.ஜி. கல்லூரி அணி மீண்டும் சாம்பியன்

கோவை : பாரதியார் பல்கலைக்கழகத்தின் உள்மண்டல கிரிக்கெட் போட்டியில் பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றது.

கோவை : பாரதியார் பல்கலைக்கழகத்தின் உள்மண்டல கிரிக்கெட் போட்டியில் பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றது. 

பாரதியார் பல்கலைக்கழகத்தின் உள்மண்டல கிரிக்கெட் போட்டிகள் பொள்ளாச்சி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியின் முதல்சுற்று நாக் அவுட் முறைப்படி நடந்தது. ஒவ்வொரு மண்டலத்திலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. மொத்தம் 4 அணிகள் ரவுண்ட் ராபின் முறையில் மோதின. 

இதில், நடப்பு சாம்பியன் பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி தோல்வியை சந்திக்காமல் மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி 2-வது இடத்தையும், எஸ்.என்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி 3-வது இடத்தையும், வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி 4-வது இடத்தையும் பிடித்தது. 

Newsletter