ஹரிஷின் சதத்தால் 3-வது வெற்றியைப் பதிவு செய்தது கிங்ஸ் கிரிக்கெட் கிளப் அணி

கோவை : 3-வது டிவிசன் கிரிக்கெட் போட்டியில் கோவை டஸ்கர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவை கிங்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.

கோவை : 3-வது டிவிசன் கிரிக்கெட் போட்டியில் கோவை டஸ்கர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவை கிங்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது. 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும், கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கமும் இணைந்து நடத்தும் 3-வது டிவிசன் கிரிக்கெட் போட்டி ரத்தினம் தொழில்நுட்ப வளாக மைதானத்தில் நடந்தது. இதில், கிங்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும், கோவை டஸ்கர்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தின. இதில், முதலில் விளையாடிய கிங்ஸ் அணி, ஹரிஷின் அபார சதத்தால் (104 நாட் அவுட்) 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் குவித்தது. 

இதைத் தொடர்ந்து, கடினமான இலக்கை நோக்கி பேட் செய்த கோவை டஸ்கர்ஸ் அணி சிறப்பாக ஆடியது. ஒருகட்டத்தில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதிகபட்சமாக ஆர். ராஜ்குமார் 50 ரன்களும், ஆர். தருண் 78 ரன்களும் எடுத்தனர். 

இதேபோல, பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஆ.கே.எஸ். கல்வி நிலையம் அணியை, என்.ஐ.ஏ. கல்வி நிறுவனம் எளிதில் தோற்கடித்தது. 

Newsletter