குன்னூரில் 70-வது ராணுவ தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கான மினி மாரத்தான் போட்டி

நீலகிரி : குன்னூரில் நடைபெற்ற 70-வது ராணுவ தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியருக்கான மினி மாரத்தான் போட்டி தங்கராஜ் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.

நீலகிரி : à®•ுன்னூரில் நடைபெற்ற 70-வது ராணுவ தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியருக்கான மினி மாரத்தான் போட்டி தங்கராஜ் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.



குன்னூரில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர் சார்பில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், எதிர்காலத்தில் இளைஞர்கள் ராணுவத்தில் சேர ஆர்வம் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடனும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இளைஞர்களின் உடல் தகுதியை பேணி காப்பதன் மூலம் எதிர்கால சந்ததியினர் வளமுடன் வாழ வழிவகை செய்யும் வகையிலும், 5 கிலோ மீட்டருக்கான மினி மாரத்தான் போட்டி ராணுவ மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். இதில், கலந்து கொண்டவர்களுக்கு ராணுவ மருத்துவனை கமாண்டண்ட் பங்கஜ் பி. ராவ் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

Newsletter