3-வது டிவிசன் கிரிக்கெட் போட்டி : கிங்ஸ் சி.சி.யை 122 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது என்.ஐ.ஏ. அணி

கோவை : கோவை மாவட்ட 3-வது டிவிசன் கிரிக்கெட் போட்டியில் என்.ஐ.ஏ. அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் சி.சி. அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

கோவை : கோவை மாவட்ட 3-வது டிவிசன் கிரிக்கெட் போட்டியில் என்.ஐ.ஏ. அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் சி.சி. அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் மற்றும் கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து டிவிசன் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் என்.ஐ.ஏ. கல்வி நிறுவனம் அணியும், கிங்ஸ் சி.சி. அணியும் பலப்பரிட்சை நடத்தின. இதில், முதலில் பேட் செய்த என்.ஐ.ஏ. அணி (எம். அசோக் குமார் 73, டி.சுசியுந்த் 42, எஸ்.அனிஸ் 34, டி. கோகுலகிருஷ்ணன் 33, கே. நாச்சிமுத்து 38) 49.4 ஓவர்களில் 284 ரன்கள் குவித்தது. 

பின்னர், கடின இலக்கை நோக்கி விளையாடிய கிங்ஸ் சி.சி. அணி, 40 ஓவர்களில் வெறும் 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 122 ரன்கள் வித்தியாசத்தில் என்.ஐ.ஏ. அணி அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் தரப்பில் எம். அசோக் குமார் 3 விக்கெட்டும், டி. கோபாலகிருஷ்ணன் 5 விக்கெட்டையும் கைப்பற்றினர். 

பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற முதல் டிவிசன் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியை, ஜாலி ரோவர்ஸ் அணி எளிதில் வென்றது. 

Newsletter