கல்லூரிகளுக்கு இடையிலான ஹாக்கி லீக் போட்டியில் பி.எஸ்.ஜி. கல்லூரி அணி சாம்பியன்

கோவை : கல்லூரிகளுக்கு இடையிலான ஹாக்கி லீக் போட்டியில் பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி வெற்றி பெற்றது.

கோவை : கல்லூரிகளுக்கு இடையிலான ஹாக்கி லீக் போட்டியில் பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி வெற்றி பெற்றது. 

தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையிலான ஹாக்கி லீக் போட்டி நடைபெற்றது. ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்ற இந்தப் போட்டி தொடரில், புள்ளிப் பட்டியலில், பி.எஸ்.ஜி. கலை கல்லூரி, என்.ஜி.பி. கல்லூரி, ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி அணிகள் முதல் 4 இடங்களைப் பிடித்தன. 



இதைத் தொடர்ந்து, நடைபெற்ற இறுதிப் போட்டிகளில், தோல்வியையே சந்திக்காத பி.எஸ்.ஜி. கல்லூரி அணி 9 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை வென்றது. என்.ஜி.பி. கல்லூரி அணி 2-வது இடத்தைப் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயச்சந்திரன் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். 

Newsletter