கோபாலாநாயுடு நினைவு கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்டேன்ஸ் பள்ளி ஐ.சி.எஸ்.இ. சாம்பியன்

கோவை : 16-வது ராவ் பகதூர் கோபாலநாயுடு நினைவு கோப்பை, கால்பந்து போட்டியில் ஸ்டேன்ஸ் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை : 16-வது ராவ் பகதூர் கோபாலநாயுடு நினைவு கோப்பை, கால்பந்து போட்டியில் ஸ்டேன்ஸ் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது. 

கடந்த 23-ம் தொடங்கிய கோபாலநாயுடு நினைவு கோப்பை கால்பந்து போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில், கோபால நாயுடு பள்ளியும், ஸ்டேன்ஸ் பள்ளி ஐ.சி.எஸ்.இ. அணியும் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்டேன்ஸ் அணி வெற்றி பெற்று, கோப்பையைக் கைப்பற்றியது. இந்த தொடரின் சிறந்த கோல் கீப்பராக ஸ்டேன்ஸ் அணியின் நிஷாந்த் தேர்வு செய்யப்பட்டார். 

Newsletter