மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் பி.வி.எம். குளோபல் பள்ளி அணி சாம்பியன்

கோவை : மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் பி.வி.எம். குளோபல் பள்ளியின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

கோவை : மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் பி.வி.எம். குளோபல் பள்ளியின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 



கோவையில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான 'பி.வி.எம். குளோபல் சோசர் ஃபெஸ்ட்' என்ற ஆண், பெண்களுக்கான கால்பந்து போட்டி, பி.வி.எம். குளோபல் சீனியர் உயர்நிலைப் பள்ளி சார்பில் நடத்தப்பட்டது. இதில், மொத்தம் ஆண்களுக்கான பிரிவில் 18 அணிகளும், பெண்களுக்கான பிரிவில் 4 அணிகளும் பங்கேற்றன. இந்தப் போட்டியை, பள்ளியின் முதல்வர் சையத் சர்பிராஸ் மற்றும் பல்வேறு பள்ளிகளின் உடற்கல்வி இயக்குநர்கள் தொடங்கி வைத்தனர்.



ஆண்கள் பிரிவின் இறுதிப் போட்டியில் டாக்டர். தசரதன் பப்ளிக் பள்ளியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பி.வி.எம். குளோபல் பள்ளி கோப்பையை வென்றது. இதேபோல, பெண்கள் பிரிவின் இறுதிப் போட்டியில், டெல்லி பப்ளிக் பள்ளியை 5-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த பி.வி.எம். குளோபல் பள்ளி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. வெற்றி பெற்ற அணிகளுக்கு தேசியப் போட்டிகளின் நடுவரும், பயிற்சியாளருமான எம். தினகரன் பரிசுகளை வழங்கினார். 



Newsletter