2வது டிவிசன் கிரிக்கெட் போட்டி : ஶ்ரீதரின் அபார பந்து வீச்சால் ஆர்.எம்.எம்.சி.சி அணிக்கு வெற்றி

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2வது டிவிசன் லீக் கிரிக்கெட் போட்டி பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2வது டிவிசன் லீக் கிரிக்கெட் போட்டி பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. 

இந்த போட்டியில், ராஜசேகர் மணி மெமோரியல் கிரிக்கெட் கிளப் அணி (ஆர்.எம்.எம்.சி.சி) மற்றும் ஆறுமுகம் கிரிக்கெட் கிளப் அணி ஆகியவை மோதிக் கொண்டன. அதில், டி.ஜி.ஶ்ரீதருடைய அபாரமான பந்து வீச்சால் ராஜசேகர் மணி மெமோரியல் கிரிக்கெட் கிளப் அணி வெற்றி வாய்ப்பைத் தட்டி சென்றது. 

முதலில், பேட்டிங் செய்த ஆறுமுகம் கிரிக்கெட் கிளப் அணிக்கு 40 ரன்களை கொடுத்த டி.ஜி ஶ்ரீதர் அடுத்தடுத்த தன் அபார பந்து வீச்சால் 6 விக்கெட்களை எடுத்தார். விறுவிறுப்பாக நடந்த இந்த லீக் போட்டியில், ஆறுமுகம் கிரிக்கெட் கிளப் அணி 28.4 ஓவரில் 131 ரன்களை கைப்பற்றியது. 

ஆனாலும், ராஜசேகர் மணி மெமோரியல் கிரிக்கெட் கிளப் அணி 47.2 ஓவருக்கு 170 ரன் எடுத்து (எம்.கதிரேசன் -40, கே.பெருமாள் -30, எஸ்.நித்தியானந்தம் -3/30) 39 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுமுகம் கிரிக்கெட் கிளப் அணியினை வீழ்த்தியது. 

இதைப் போலவே, கோவை தொழில்நுட்ப நிறுவனத்தின் வளாகத்தில் நடைபெற்ற 4வது டிவிசன் லீக் போட்டியில், ஈ.ஏ.பி கிரிக்கெட் அகாடமி மற்றும் சி.ஐ.டி கிரிக்கெட் கிளப் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன. இதில், 47.4 ஓவருக்கு 250 ரன்கள் என்ற கணக்கில் ஈ.ஏ.பி கிரிக்கெட் அகாடமி அணி, சி.ஐ.டி கிரிக்கெட் கிளப் அணியினை வென்றது. 

Newsletter