10 -வது சென்டைஸ் குழு போட்டிகள் : பி.எஸ்.ஜி, எஸ்.என்.எஸ்., கல்லூரி அணிகள் வெற்றி

கோவை: கோவையில் மண்டல அளவில் பொறியியல் கல்லுாரி மாணவிகளுக்கான த்ரோபால் மற்றும் பேட்மின்டன் போட்டியில், பி.எஸ்.ஜி.,கல்லுாரியும், கோ-கோ மற்றும் பேட்மின்டன் போட்டியில் எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி அணியும் சாம்பியன் பட்டம் வென்றன.

கோவை: à®•ோவையில் மண்டல அளவில் பொறியியல் கல்லுாரி மாணவிகளுக்கான த்ரோபால் மற்றும் பேட்மின்டன் போட்டியில், பி.எஸ்.ஜி.,கல்லுாரியும், கோ-கோ மற்றும் பேட்மின்டன் போட்டியில் எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி அணியும் சாம்பியன் பட்டம் வென்றன. 



கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் இன்டர் இன்ஜி., ஸ்போர்ட்ஸ் கிளப் (சென்டைஸ்) மற்றும் அனைத்துப் பொறியியல் கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர்கள் சார்பில், 10வது சென்டைஸ் குழு போட்டிகள், சரவணம்பட்டி எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி மைதானத்தில் நடந்து வருகிறது. 

இதில், மாணவிகளுக்கான, பேட்மின்டன், பூப்பந்து, த்ரோபால், வாலிபால், கூடைப்பந்து, கோ-கோ உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. அதில், 20க்கும் மேற்பட்ட கல்லுாரி அணிகள் பங்கேற்றன. த்ரோபால் போட்டியில், அரைஇறுதியில், கொங்கு கல்லுாரி 2-0 செட் கணக்கில், பண்ணாரி அம்மன் கல்லுாரியை வென்றது. மற்றொரு போட்டியில், பி.எஸ்.ஜி., கல்லுாரி 2-1 செட் கணக்கில் கே.ஐ.டி., கல்லுாரியை வென்றன. 

3வது இடத்துக்கான போட்டியில், பண்ணாரி அம்மன் கல்லுாரி 2-1 செட் கணக்கில் கே.ஐ.டி.,கல்லுாரியை வென்றது. இறுதி போட்டியில், பி.எஸ்.ஜி.,கல்லுாரி 2-0 செட் கணக்கில் கொங்கு கல்லுாரியை வென்றது. மேலும், எஸ்.என்.எஸ் கல்லூரி அணி பால் பேட்மிட்டன் மற்றும் கோ கோ போட்டிகளில் வெள்ளாலர் மகளிர் கல்லூரி அணி மற்றும், குமரகுரு காலேஜ் அணியை வீழ்த்தி சாதனை படைத்தது. 



இதை போலவே, வாலிபால் போட்டியில், கொங்கு கல்லுாரி அணியும், ஈரோடு பில்டர் இஞ்னியரிங் கல்லூரி அணி கூடைப்பந்து போட்டியிலும், பண்ணாரி அம்மன் கல்லுாரி அணி டேபிள் டென்னிஸ் போட்டியிலும் வெற்றி கண்டன. இந்த போட்டியினை, எஸ்.என்.எஸ் கல்லூரி முதல்வர் டாக்டர்.எஸ். செந்தூரபாண்டியன் மற்றும் அதே கல்லூரியின் தொழில்நுட்ப இயக்குனர் டாக்டர்.எஸ்.நளின் நிர்மல் குமார் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். 

Newsletter