10 -வது சென்டைஸ் குழு கோ-கோ போட்டி : குமரகுரு கல்லுாரி அணி சாம்பியன்

கோவை : மண்டல அளவில் அனைத்து பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கான கோ-கோ போட்டியில், குமரகுரு கல்லுாரி அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

கோவை : மண்டல அளவில் அனைத்து பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கான கோ-கோ போட்டியில், குமரகுரு கல்லுாரி அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் பொறியியல் கல்லூரிகளுக்கிடையேயான ஸ்போர்ட்ஸ் கிளப் சென்டைஸ் ஆகும். இதனுடன், அனைத்து பொறியியல் கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர்கள் சார்பில், 10வது சென்டைஸ்கோ-கோ போட்டி, அவிநாசிரோடு சி.ஐ.டி., கல்லுாரியில் நடந்தது.

இந்த போட்டியில், 12 கல்லுாரிகள் பங்கேற்றன. முதல் அரை இறுதி போட்டியில், குமரகுரு கல்லுாரி 18-17 புள்ளி கணக்கில் சி.ஐ.டி கல்லுாரியையும், 2வது போட்டியில், எஸ்.என்.எஸ்.,டெக்.,கல்லுாரி 16-15 புள்ளி கணக்கில் பி.எஸ்.ஜி., கல்லுாரியையும் வென்றன.

3வது இடத்துக்கான போட்டியில், சி.ஐ.டி., கல்லுாரி 6-9 புள்ளி கணக்கில் பி.எஸ்.ஜி.,டெக்.,கல்லுாரியை வென்றது. இறுதி போட்டியில், குமரகுரு கல்லுாரி 23-17 புள்ளி கணக்கில் எஸ்.என்.எஸ்.,டெக்., கல்லுாரியை வென்றது.

Newsletter