2-வது டிவிசன் கிரிக்கெட் போட்டி : ரெயின்போ அணியை வீழ்த்தியது எஸ்.என்.ஆர். சன்ஸ் டிரஸ்ட் அணி

கோவை : தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் 2-வது டிவிசன் கிரிக்கெட் போட்டியில் ரெயின்போ 1972 எம்.எம்.சி.சி. அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் எஸ்.என்.ஆர். சன்ஸ் டிரஸ்ட் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

 à®ªà®¿.எஸ்.ஜி. மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ரெயின்போ 1972 எம்.எம்.சி.சி. அணி எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. குறிப்பாக, எஸ்.என்.ஆர். சன்ஸ் டிரஸ்ட் அணியின் எஸ்.பி. சரவண குமார் (5 விக்கெட்) பந்துவீச்சில் அசத்தினார். இதனால், அந்த அணி 29.5 ஓவர்களில் 86 ரன்களுக்கு சுருண்டது. 

இதைத் தொடர்ந்து, எளிய இலக்குடன் களமிறங்கிய எஸ்.என்.ஆர். சன்ஸ் டிரஸ்ட் அணி 28-வது ஓவரில் ஐந்து விக்கெட் à®‡à®´à®ªà¯à®ªà®¿à®±à¯à®•ு 87 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. 

இதேபோல, நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஆர்.கே.எஸ். சி.ஏ. அணி 50 ஓவர்களுக்கு 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் சேர்த்தது. இதைத் தொடர்ந்து, பேட் செய்த சூர்யபாலா கிரிக்கெட்டர்ஸ் அணி 44 ஓவர்களில் 135 ரன்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது. 

Newsletter