தென்மண்டல பல்கலைக்கழக டென்னிஸ் போட்டி : பாரதியா பல்கலை.,க்கு 2-வது இடம்

சென்னை : தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான டென்னிஸ் போட்டியில் பாரதியார் பல்கலைக்கழகம் அணி முதல்முறையாக 2-வது இடத்தை பிடித்துள்ளது.

சென்னை : தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான டென்னிஸ் போட்டியில் பாரதியார் பல்கலைக்கழகம் அணி முதல்முறையாக 2-வது இடத்தை பிடித்துள்ளது.

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கடந்த 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற்ற இந்தப் போட்டித் தொடரில், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 68 பல்கலைக்கழக அணிகள் கலந்து கொண்டன. இதில், தமிழகம் சார்பில் கலந்து கொண்ட பாரதியார் பல்கலைக்கழக அணியில், பி.எஸ்.ஜி. கல்லூரியைச் சேர்ந்த பாரத் நிஷோக் குமரன், எல்.ஆர். பாலாஜி, ஆர். ராமகிருஷ்ணன், ஆர். ஹர்னீஷ், ஆர். கார்த்திக் குமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 



இத்தொடரில் சிறப்பாகவும், துல்லியமாகவும் செயல்பட்ட பாரதியார் பல்கலைக்கழக அணி எதிரணிகளை எளிதில் தோற்கடித்தது. அரையிறுதி போட்டியில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தை வீழ்த்திய பாரதியார் பல்கலைக்கழக அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதேவேளையில், சமபலத்துடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மெட்ராஸ் பல்கலைக்கழக அணி, பாரதியார் பல்கலைக்கழகத்தை வீழ்த்தி, வெற்றி பெற்றது. இதன் மூலம், முதல் தோல்வியை சந்தித்த பாரதியார் பல்கலைக்கழக அணி 2-வது இடத்தை பிடித்தது.

மேலும், இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் நடைபெற இருக்கும் போட்டித் தொடருக்கு பாரதியார் பல்கலைக்கழக அணி தேர்வாகியது.



Newsletter