3வது டிவிசன் கிரிக்கெட் போட்டியில் என்.ஐ.ஏ அணி வெற்றி : வீணானது அஸ்வினின் 7 விக்கெட்கள்

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 3வது டிவிசன் லீக் போட்டி நேற்று நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 3வது டிவிசன் லீக் போட்டி நேற்று நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. 

இந்த லீக் போட்டியில், கோவை டஸ்கர்ஸ் மற்றும் என்.ஐ.ஏ கல்வியியல் கல்லூரி அணிகள் மோதிக் கொண்டன. அதில், அஸ்வின் தனது அபார பந்து வீச்சால் 7 விக்கெட்களை வீழ்த்தி கோவை டஸ்கர் அணிக்கு பலம் கூட்டினார். ஆனால், என்.ஐ.ஏ அணியினை சேர்ந்த அசோக் குமார் அதற்கு ஈடுகட்டி விளையாடினார். அஸ்வின் கடுமையாக முயன்றும், என்.ஐ.ஏ அணி 212 ரன்களை குவித்து வெற்றி வாகை சூடியது. கோவை டஸ்கர்ஸ் அணி 44.3 ஓவருக்கு 168 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. 

அதைப் போலவே, பொள்ளாச்சி பிஐஈ மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில், சூர்யபாலா கிரிக்கெட் அகாடமி அணி, கிங்க்ஸ் கிரிக்கெட் கிளப் அணியினை 52 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

Newsletter