4-வது டிவிசன் லீக் கிரிக்கெட் போட்டி : கோகுலின் ஆல்-ரவுண்ட் பர்ஃபாமன்சால் கோவை காம்ராட்ஸ் அணி வெற்றி

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் 4-வது டிவிசன் லீக் கிரிக்கெட் போட்டி கோவை காம்ராட்ஸ் அணி வெற்றி வெற்றி பெற்றது.

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் 4-வது டிவிசன் லீக் கிரிக்கெட் போட்டி கோவை காம்ராட்ஸ் அணி வெற்றி வெற்றி பெற்றது. 

ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் கோவை காம்ராட்ஸ் அணி முதலில் பேட் செய்தது. கோகுல் மூர்த்தி 64 ரன்கள் விளாச, அந்த அணி 42.3 ஓவர்களில் 136 ரன்களுக்கு சுருண்டது. இதைத் தொடர்ந்து, எளிய இலக்குடன் களமிறங்கிய கோயம்புத்தூர் ரைடர்ஸ் கிரிக்கெட் அகாடமி, கோகுல் மூர்த்தி மற்றும் பி. கார்த்திக்கின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. இதனால், அந்த அணி 30.3 ஓவர்களில் 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது. 

இதேபோல, பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 4-வது டிவிசனின் மற்றொரு போட்டியில், டெவில் ஸ்டிரோக்கர்ஸ் அணியை (126 ரன்கள்) சி.ஐ.டி.சி.சி. (129/6) தோற்கடித்தது. 

Newsletter