2018-19 கல்வியாண்டில் 175 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி அணி

கோவை : நடப்பு கல்வியாண்டில் அதிக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற பெருமையையும், அதில் 175 பதக்கங்களை வென்ற சாதனையையும் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி அணி பெற்றுள்ளது.

கோவை : நடப்பு கல்வியாண்டில் அதிக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற பெருமையையும், அதில் 175 பதக்கங்களை வென்ற சாதனையையும் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி அணி பெற்றுள்ளது. 

நிதிப்பற்றாக்குறை, போதிய வசதி, பயிற்சி மற்றும் ஊக்கமின்மையால் திறமையுள்ள விளையாட்டு வீரர்களுக்கு கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கப் பெறுவதில்லை. எனவே, திறமையானவர்களுக்கு கல்வி, உணவு, தங்குமிடம், பயிற்சி மற்றும் உபகரணங்கள் போன்றவற்றை இலவசமாக வழங்கி பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது 75 ஏழை குடும்பத்தைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு இலவச கல்வி வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், நடப்பாண்டில் தடகளம், கூடைப்பந்து, வாலிபால், கைப்பந்து, குத்துச்சண்டை, டென்னிஸ், டெபிள் டென்னிஸ், பேட்மிண்டன் மற்றும் பளுதூக்குதல், ஆக்கி, கோ-கோ, டேக்வொண்டோ, சிலம்பம், வுஷு, நீச்சல், செஸ், கேரம், வில் வித்தை உள்ளிட்ட போட்டிகள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் நடைபெற்றது. மொத்தம் 215 போட்டிகளில், பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியின் அணி கலந்து கொண்டது. அதில், 82 தங்கம், 58 வெள்ளி, 35 வெண்கலம் மற்றும் தேசிய அளவில் 20 பதக்கங்கள் என மொத்தம் 175 பதக்கங்களை வென்று குவித்துள்ளனர். 

இதன்மூலம், நடப்பு கல்வியாண்டில் பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில், அதிக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற பெருமையையும், அதில் 175 பதக்கங்களை வென்ற சாதனையையும் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி அணி பெற்றுள்ளது. 

Newsletter