கோவை ஸ்கேட்டிங் பயிற்சியாளருக்கு வின்ஷா விருது வழங்கி கவுரவிப்பு

கோவை : சிறந்த ஸ்கேட்டிங் அகாடமி மற்றும் சிறந்த பயிற்சியாளருக்கான வின்ஷா விருதை பயிற்சியாளர் ஆர். சங்கருக்கு வழங்கப்பட்டது.

கோவை : சிறந்த ஸ்கேட்டிங் அகாடமி மற்றும் சிறந்த பயிற்சியாளருக்கான வின்ஷா விருதை பயிற்சியாளர் ஆர். சங்கருக்கு வழங்கப்பட்டது. 



தமிழ் ரோலர் ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் சங்கம் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் இளம் வீரர், வீராங்கனைகளுக்கு ஸ்கேட்டிங் பயிற்சி அளித்து, சிறந்த தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்களை உருவாக்கி வருகிறது. இந்த அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். 



இந்த நிலையில் வின்ஷா குழுமம் சார்பில் கடந்த 5 ஆண்டுகளில் சிறந்த தொழிலதிபர்கள் மற்றும் தொழில்கள் தேர்வு செய்யப்பட்டு, வின்ஷா விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த முறை சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு என தனிப் பிரிவுக்கு விருது வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஓட்டல் விஜய் எலன்ஷாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த விழாவில், தமிழ் ரோலர் ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் சங்கம் மற்றும் அதன் பயிற்சியாளர் ஆர். சங்கருக்கு சிறந்த பயிற்சியாளருக்கான விருது வழங்கப்பட்டது. அதோடு, நடனம், கராத்தே, அழகு நிலையம் உள்ளிட்ட பிரிவுகளிலும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 



Newsletter