5-வது டிவிசன் கிரிக்கெட் போட்டி : 3 ரன்கள் வித்தியாசத்தில் காஸ்மோ வில்லேஜ் ஆர்.பி.இ. அணி வெற்றி

கோவை : கோவையில் நடைபெற்ற 5-வது டிவிசன் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ கிரிக்கெட் கிளப் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் காஸ்மோ வில்லேஜ் ஆர்.பி.இ. ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி வீழ்த்தியது.

கோவை : கோவையில் நடைபெற்ற 5-வது டிவிசன் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ கிரிக்கெட் கிளப் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் காஸ்மோ வில்லேஜ் ஆர்.பி.இ. ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி வீழ்த்தியது. 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் டிவிசன் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி 5-வது டிவிசன் கிரிக்கெட் லீக் போட்டியில், ஸ்ரீ கிரிக்கெட் கிளப் அணி மற்றும் காஸ்மோ வில்லேஜ் ஆர்.பி.இ. ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில், முதலில் பேட் செய்த காஸ்மோ அணி 39 ஓவர்களில் 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக எஸ். சதீஷ்குமார் 57 ரன்கள் எடுத்தார். ஸ்ரீ கிரிக்கெட் கிளப் அணியின் சார்பில் சி. பார்குணன் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய ஸ்ரீ கிரிக்கெட் கிளப் அணியின் பேட்ஸ்மென்கள் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவேளையில் விக்கெட்டுக்களை இழந்தனர். ஆர். ராம்குமார் (51), சி. பார்குணன் (39) ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தனர். இருப்பினும், மற்ற வீரர்கள் ஏமாற்றம் அளித்தால் ஸ்ரீ கிரிக்கெட் கிளப் அணி 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. காஸ்மோ அணியின் சார்பில் கே. ரகு பிரசாந்த் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். 

இதேபோல, 4-வது டிவிசனில் நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில் டெவில் ஸ்டேரோக்கர்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் சச்சின் சி.சி. தோற்கடித்தது. 

Newsletter