ஆசிய தடகள விளையாட்டுப் போட்டி : தங்கம் வென்றார் கோமதி மாரிமுத்து

ஆசிய தடகள விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஆசிய தடகள விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்று வருகிறது. இதில், பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இது அவரது சிறந்த ஓட்ட நேரமாகும். தங்கப்பதக்கம் வென்ற கோமதி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். இந்த போட்டி தொடரில் இந்தியா வென்ற முதல் தங்கம் இதுவாகும். 

திருச்சி மணிகண்டம் பகுதியைச் சேர்ந்த கோமதி, தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற பெடரேஷன் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter