ஸ்ரீ ராமகிருஷ்ணா அணியை 6 விக்., வித்தியாசத்தில் வீழ்த்தியது திருப்பூர் கிரிக்கெட் கிளப் அணி : விஜய் அபிமன்யூ சதம் வீண்

கோவை : கோவையில் நடைபெற்ற முதல் டிவிசன் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் கிரிக்கெட் கிளப் அணி தோற்கடித்தது.

கோவை : கோவையில் நடைபெற்ற முதல் டிவிசன் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் கிரிக்கெட் கிளப் அணி தோற்கடித்தது. 

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் இந்தப் போட்டியானது, பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் பேட் செய்த ராமகிருஷ்ணா கல்லூரி அணி, விஜய் அபிமன்யூவின் (102) அபார சதத்தால், 48.4 ஓவர்கள் முடிவில் 230 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து, பேட் செய்த திருப்பூர் கிரிக்கெட் கிளப் அணி 4 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து இலக்கை எளிதில் எட்டியது. அதிகபட்சமாக பவன்ஸ்ரீ 95 ரன்களுடனும், சங்கமேஸ்வர் 78 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

இதேபோல, ஸ்ரீ சக்தி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 2-வது டிவிசனுக்கான மற்றொரு போட்டியில், ஆர்.கே.எஸ். கிரிக்கெட் அகாடமி 44.4 ஓவர்களில் 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால், எளிய இலக்கை நோக்கி ஆடிய ராஜசேகர் மணி எம்.சி.சி. அணி 104 ரன்களுக்கு சுருண்டு தோல்வியைத் தழுவியது. 

Newsletter