ஆசிய சிலம்பம் போட்டியில் 18 பதக்கங்களை வென்று குவித்த கோவை வீரர், வீராங்கனைகள்

கோவை : 4-வது ஆசிய சிலம்பம் போட்டியில் கோவையை சேர்ந்த சிலம்பய சிலம்பம் மையத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 18 பதக்கங்களை கைப்பற்றினர்.

கோவை : 4-வது ஆசிய சிலம்பம் போட்டியில் கோவையை சேர்ந்த சிலம்பய சிலம்பம் மையத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 18 பதக்கங்களை கைப்பற்றினர்.

நாகர்கோவிலில் கடந்த 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையில் 4-வது ஆசிய சிலம்பம் போட்டிகள் நடத்தப்பட்டது. மினி சப்-ஜூனியர், சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் ஆகிய பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், இந்தியா, நேபால், சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த சுமார் 400 வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் கோவையை சேர்ந்த சிலம்பய சிலம்பம் மையத்தைச் சேர்ந்த 8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இவர்கள் மொத்தம் 11 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றனர்.



சிலம்பய சிலம்பம் மையம் அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களின் விபரம் : எஸ். மணீஷ், ஶ்ரீ வர்ஷன், வி. கிருஷ்ண குமார், அருண் பாண்டியன், எஸ். சரண்ராஜ், பிரியதர்ஷ்ணி, சி.வி. பூஜா, எஸ். நிவேதா. 

Newsletter