4-வது தேசிய யோகா போட்டியில் 10 தங்கம் உள்பட 17 பதக்கங்களை வென்று குவித்த கோவை அணி

கோவை : அந்தமானில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அணியினர் 10 தங்கம் உள்பட 17 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

கோவை : அந்தமானில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அணியினர் 10 தங்கம் உள்பட 17 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். 

யோகா கலாச்சார சமுதாயத்தின் சார்பில் 4-வது தேசிய யோகா போட்டிகள் அந்தமானின் போர்ட் பிளேயரில் கடந்த மாதம் 26-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், சுமார் 250-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். கோவை சார்பில் 10 பேர் கொண்ட குழு பங்கேற்றது.

அவர்களில், சம்யுக்தா, யாஷாஷ்வினி, கனி அமுதன், தமிழிசை, மிருதுளா ஸ்ரீ, பிரனேஷ், சுஷில், சாத்விகா, நேத்ராஸ்ரீ மற்றும் ஆகியோர் குறிப்பிட்ட சில பிரிவுகளில் பதக்கங்களை வென்றனர். மொத்தம் 10 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் உள்பட 17 பதக்கங்களை இந்தக் குழு வென்றுள்ளது. 

Newsletter