வரும் 15- ம் தேதி கோவை மாவட்ட கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் அணிக்கான வீரர்களின் தேர்வு வரும் 15-ம் தேதி நடைபெற இருப்பதாக மாவட்ட கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் அணிக்கான வீரர்களின் தேர்வு வரும் 15-ம் தேதி நடைபெற இருப்பதாக மாவட்ட கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

கோவை - அவிநாசி சாலையில் உள்ள நவ இந்தியாவில் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அருவிகள் கல்லூரியில் இந்த தேர்வு முகாம் நடக்கிறது. 14, 16 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 15-ம் தேதி காலை 7 முதல் 14 வயதுக்குட்பட்டோருக்கான வீரர்களின் தேர்வு நடக்கிறது. 2005-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.16-ம் தேதியன்று 16 வயதுக்குட்பட்டோருக்கான வீரர்களின் தேர்வு நடக்கிறது. 2003-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் மட்டுமே இதற்கு தகுதியுடையவர்கள். இதேபோல, 18-ம் தேதி காலை 7 முதல் மதியம் 1 மணி வரை 19 வயதுக்குட்பட்டோருக்கான வீரர்களின் தேர்வு நடக்கிறது. 2000-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விபரங்களுக்கு கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் இணை செயலாளர் எஸ். சுரேஷ் குமாரை 9442002622 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter