கோவை மாவட்ட அளவிலான குத்துச் சண்டை போட்டி - அசத்திய மாணவ மாணவிகள்

கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான குத்துச் சண்டைப் போட்டியில் பாய்ண்ட் பைட்டிங், லைட் மற்றும் ஃபுல் கான்டாக்ட், கிக் லைட், மியூசிக் பைட் பிரிவுகளில் வென்று, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.


கோவை: தமிழ்நாடு மாநில கிக் பாக்சிங் அசோசியேஷன் மற்றும் கோவை மாவட்ட அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் ஆகியோர் இணைந்து மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டியை நடத்தியது.



குனியமுத்தூரிர் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஐந்து வயது முதல் கல்லூரி மாணவ, மாணவியர் வரை ஏராளமானோர் போட்டியாளர்களாகக் கலந்துகொண்டனர்.



பாய்ண்ட் பைட்டிங், லைட் மற்றும் ஃபுல் கான்டாக்ட், கிக் லைட், மியூசிக் பைட் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.



இதில் வயது வித்தியாசமின்றி கலந்து கொண்ட இளம் போட்டியாளர்கள் அதிரடியாக விளையாடி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட இருப்பதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter