கடைசி டெஸ்டில் சதம் விளாசி சாதனை படைத்த இங்., வீரர் குக்

சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெறுவதாக அறிவித்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் குக், தனது கடைசி இன்னிங்சில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.


சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெறுவதாக அறிவித்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் குக், தனது கடைசி இன்னிங்சில் சதம் விளாசி அசத்தியுள்ளார். 

இங்கிலாந்து அணியின் முன்னணி தொடக்க பேட்ஸ்மேன் அலஸ்டைர் குக். இவர், கடந்த 2006-ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற டெஸ்டில் அறிமுகமானார். தொடக்க வீரராக களம் இறங்கிய குக் முதல் இன்னிங்சில் 60 ரன்களும், 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 104 ரன்களும் விளாசி சாதனைப் படைத்தார்.

தற்போது, லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியாவிற்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் அலஸ்டைர் குக் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார். முதல் இன்னிங்சில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2-வது இன்னிங்சில் மதிய உணவிற்கு முன்னதாக குக் சதம் விளாசினார். இதன் மூலம், அறிமுகம் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிகளின் இரு இன்னிசிங்கிலும் முறையே அரைசதம் மற்றும் சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

Newsletter