பாரதியார் பல்கலைக்கழக கூடைப்பந்து போட்டி : பி.எஸ்.ஜி., கல்லூரி அணி மீண்டும் சாம்பியன்

கோவை : பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட கூடைப்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி., கல்லூரி அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

கோவை : பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட கூடைப்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி., கல்லூரி அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. 

பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி கடந்த 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில், ஜி.ஆர்.டி., கல்லூரி மற்றும் பி.எஸ்.ஜி., கல்லூரி அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தியது. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பி.எஸ்.ஜி., கல்லூரி அணி 92-86 என்ற புள்ளிகள் கணக்கில் மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

பாரதியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உடற்கல்வி இயக்குநர் எஸ்.டி.என்., ராஜேஸ்வரன் வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் கே. வடிவேலு கலந்து கொண்டார். 

Newsletter