பாரதியார் பல்கலை., டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பி.எஸ்.ஜி கல்லூரி வெற்றி

கோவை: குமரகுரு கல்லூரி சார்பில் நடத்தப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.

கோவை: குமரகுரு கல்லூரி சார்பில் நடத்தப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில், பாரதியார் பல்கலைக்கழக அணியை 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி வென்றது. முன்னதாக இந்த போட்டிகளில் 12 கல்லூரிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன.

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி மற்றும் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில், 3-1 என்ற புள்ளி கணக்கில் கொங்குநாடு கல்லூரி வெற்றி பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றது.

வெற்றி பெற்ற அணிகளுக்கு பாரதியார் பல்கலையின் உடற்கல்வி துறை இணை பேராசிரியர் அன்பழகன் கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

Newsletter